
திருப்பூர், செப். 23
திருப்பூரில், மாற்றுத் திறனாளர்களுக்கு ரூ.1,05,000 மதிப்பிலான செயற்கை கால்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
திருப்பூர் மாவட்ட சக்ஷம் அமைப்பு, பழனிசாமி பொன்னம்மாள் அறக்கட்டளை ஆகியன இணைந்து கடந்த மாதம் நடத்திய செயற்கை கால்கள் அளவீட்டு முகாமில் கலந்து கொண்டு அளவீடு செய்து கொண்ட 15 மாற்றுத் திறனாளர்களுக்கு ரூ.1,05,000- மதிப்பிலான செயற்கை கால்கள் மற்றும் காலிப்பர்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் சாமிநாதபுரம் சாலையில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்றுமதி நிறுவனத்தின் தலைவர் ரவிச்சந்திரன், சக்ஷம் அமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ரத்தினசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். சக்ஷம் அமைப்பின் மாவட்ட செயலாளர் தமிழ் செல்வம், பழனிசாமி-பொன்னம் மாள் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் கோவிந்தராஜ் (குட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குன ர்கள் ஸ்ரீதேவி மற்றும் லோகேஸ்வர் ஆகியோர் உபகரணங்களை வழங்கி வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் சக்ஷம் அமைப்பின் மாநில இணைப்பொருளாளர் கண்ணன், உத்யோக் பாரதி மாநில துணைத்தலைவர் திருநாவுக்கரசு, திருப்பூர் கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் செந்தில் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?