பனங்கிழங்கே பனங்கிழங்கே
பார்போற்றும் பனங்கிழங்கே
வனப்பான பனங்கிழங்கே
வளமைதரும் பனங்கிழங்கே!
நார்ச்சத்தைப் பெற்றுள்ளாய்
நற்புரதம் கொண்டுள்ளாய்
நோயெதிர்ப்பு சக்தியையும்
நேர்ந்தேதான் பெற்றுள்ளாய்!
அமிலங்கள் அதிகமாக
ஆங்கேதான் கொண்டுள்ளாய்
கமழ்கின்ற நன்மைகளைக்
கனிவாகப் பெற்றுள்ளாய்!
மலச்சிக்கல் வாராமல்
மாண்பாகக் காக்கின்றாய்
வலிமைதனை நல்கியேநீ வண்மையையே காண்கின்றாய்!
புற்றுநோயை ஓட்டிடுவாய்
பொலிவாக மணக்கின்றாய்
பற்றுகொண்டு பனங்கிழங்கைப்
பாங்காக உண்டிடலாம்!
நீரிழிவு நோய்க்குத்தான்
நேர்ந்தேதான் உதவுகின்றாய்
யாருமிதைச் சாப்பிட்டால்
அழகாக மிளிரலாமே!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%