
சென்னை, அக்.6- சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், பழங்குடியின மாணவர் களின் பள்ளிப் போக்குவரத்திற்காக 26 வாகனங் களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளி செல்வதற்கு வாகன வசதி இல்லாத தால் கல்வியை இடை நிறுத்திய பழங்குடியின மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்வ தற்கான வழியை ஏற்ப டுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல் படுத்த ப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஈரோடு, நீலகிரி, சேலம், தரும புரி, திருச்சி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 23 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பழங்குடியின மக்களின் மருத்துவத் தேவைகளுக்காக 25 அவசர கால ஊர்திகளையும், 20 நடமாடும் மருத்துவ ஊர்திகளையும் கொடிய சைத்து தொடங்கி வைத்தார். மேலும், திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் ரூ.38 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகளையும் திறந்து வைத்தார். இதேபோல், பழனி, திருப்பத்தூர், கூடலூர், சங்கராபுரம், மேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களையும் திறந்து வைத்தார். காஞ்சிபுரத்தில் உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அலுவலகக் கட்டடங்கள் திறக்கப்பட்டன. மருத்துவம், ஓமியோபதி ஆணையரகம் சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களையும், மருத்துவம், ஓமியோ பதி ஆணையரகம் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் அமைச்சர்கள் எ.வ. வேலு, மதி வேந்தன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?