அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் 50 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் 50 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்



திருச்சிராப்பள்ளி, அக். 6- ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்கள் பெறும் அகவிலைப்படி மருத்துவக் காப்பீடு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதிய உயர்வு, குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்வு வழங்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன திருச்சி - கரூர் மண்டலங்கள் சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி புறநகர் கிளை முன்பு, தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 50 ஆவது நாளாக திங்களன்று நடந்த போராட்டத்திற்கு, டி.என்.எஸ்.டி.சி திருச்சி - கரூர் மண்டல துணைத்தலைவர் நீலமேகம் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ். ஸ்ரீதர் துவக்க உரையாற்றினார். போராட்டத்தை விளக்கி டி.என்.எஸ்.டி.சி திருச்சி, கரூர் மண்டலத் தலைவர் சிங்கராயர், மண்டல பொதுச் செயலாளர் மாணிக்கம், பொருளாளர் முத்துக்குமார், எஸ்.இ.டி.சி மாநிலத் தலைவர் அருள்தாஸ், எஸ்.இ.சி.டி.சி ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள், டி.என்.எஸ்.டி.சி ஓய்வு பெற்றோர் சங்கம் நிர்வாகிகள் பேசினர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%