பாகிஸ்தானில் 11 தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினர்
Jan 12 2026
11
இஸ்லாமாபாத், ஜன.
பாகிஸ்தானில், 11 பயங்கர வாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் கடந்த 8–ந்தேதி பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில், தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் எனும் அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதேபோல், குர்ராம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கூட்டு நடவடிக்கையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது முதல் பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
போராட்டம்
பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதிகோரி மனித உரிமைக் குழுக்கள் போராட்டம் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சர்பராஸ் நிஸாமனி என்பவரின் நிலத்தை இந்து விவசாயியான கைலாஷ் கோலி குத்தகைக்கு எடுத்திருந்தார். இந்த நிலையில், கைலாஷை நிஸாமனி சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நிலப் பிரச்னைதான கொலைக்கான காரணம் என்று கூறப்பட்டாலும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாக வில்லை. இதனிடையே, கைலாஷின் கொலையைக் கண்டித்து, பாகிஸ்தானில் இந்து சிறுபான்மை அமைப்பினரும் மனித உரிமைக் குழுக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. நிஸாமனியை கைது செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்த கைலாஷின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?