பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை
Dec 21 2025
12
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர மேலும் பல வழக்குகள் இம்ரான் மீது தொடுக்கப்பட்டன. அதில் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2023-ல் கைது செய்யப்பட்டு, அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சவுதி மன்னரிடம் பரிசுப்பொருளாக நகை பெற்றது தொடர்பான 2வது ஊழல் வழக்கில், இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா 17 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் நீதிபதி ஷாருக் அர்ஜுமந்த் தீர்ப்பு வழங்கினார்.
முன்னதாக, அடியாலா சிறையில் இம்ரான்கான் துன்புறுத்தப்படுவதாக, அவரின் மகன்கள் குற்றம் சாட்டிய நிலையில், இம்ரான்கானுக்கு சிறையில் ஐந்து நட்சத்திர விடுதியின் வசதிகளைவிட மேம்பட்ட வசதிகள் தரப்படுவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் விளக்கமளித்தார்.
இதனிடையே சிறையில் உள்ள இம்ரான்கான், கொல்லப்பட்டதாக பாகிஸ்தானில் பேச்சுகள் எழுந்தன. இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் இம்ரான் கட்சியினர் பெரும் கொந்தளிப்பில் இருந்ததோடு, போராட்டங்களிலும் குதித்தனர். சிறையில் இம்ரான் சகோதரி உஸ்மா கான் சந்தித்து பேசிய பிறகு தான், அவர் உயிருடன் இருக்கிறார் என்று அனைவரும் நம்பினர்.
இதனிடையே, இம்ரான்கானை தனிமைச் சிறையில் இருந்து விடுவிக்க ஐநா அவையும் கோரிக்கை விடுத்திருந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?