இந்தியா, இலங்கை நாடுகளில் பார்வை குறைபாடு ள்ள பெண்களுக்கான டி-20 உலகக்கோப்பை முதல் சீசன் நடைபெற்று வந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன. இந்த தொடரின் இறுதி ஆட்டம் இலங்கை நாட்டின் கொழும்பு நகரில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய நேபாளம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. 120 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 12 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி (117 ரன்கள்) 7 விக்கெட் வித்தியாசத்தில அபார வெற்றி பெற்றது. புலா சரேன் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இந்திய அணி யின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் முதல் பார்வையற் றோர் மகளிர் டி-20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்தது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?