கவுகாத்தி டெஸ்ட் : தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவிப்பு

கவுகாத்தி டெஸ்ட் : தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவிப்பு



இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் (கொல்கத்தா) தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 2ஆவது டெஸ்ட் போட்டி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் சனிக்கிழமை அன்று தொடங்கியது. இந்த போட்டி யில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து முத லில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்க அணி பேட்டர்கள் ஆடுகளத்தின் தன்மை மற்றும் இந்திய பந்துவீச்சா ளர்களின் தாக்குதலை கணித்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி னர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 81.5 ஓவர் களில் 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து இருந்தது. தென் ஆப்பி ரிக்க வீரர்கள் செனுரன் முத்துசாமி (25), கெய்ல் (1) ஆகியோர் களத்தில்இருந்தனர். தொடர்ந்து ஞாயிறன்று 2ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது. மிடில் ஆர்டரை இழந்ததால் தென் ஆப்பி ரிக்க அணியை எளிதாக சுருட்டி விடலாம் என இந்திய பந்துவீச்சாளர் கள் மந்தமான ஆட்டத்தை வெளிப் படுத்த, விக்கெட் சரிவுகளுக்கு இடையே செனுரன் முத்துசாமி, மார்கோ ஜேன்சன் ஆகிய இருவரும் கவுகாத்தி மைதானத்தில் நங்கூரம் அமைத்து அபார ஆட்டத்தை வெளிப் படுத்தினர். இந்திய வம்சாவளியான செனுரன் முத்துசாமி (109 ரன்கள்) சதமடித்து ஆட்டமிழக்க, மார்கோ ஜேன்சன் 93 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். மார்கோ ஜேன்சன் ஆட்டமிழந்த பின்பு தென் ஆப்பிரிக்க அணியின் முதல் இன்னி ங்ஸும் முடிவுக்கு வந்தது. தென் ஆப்பி ரிக்க முதல் இன்னிங்சில் 151.1 ஓவர் களில் 489 ரன்கள் எடுத்து ஆட்டமி ழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து தனது முதல் இன்னி ங்ஸை இந்திய அணி தொடங்கிய நிலையில், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்து இருந் தது. ஜெய்ஸ்வால் (7), கே.எல்.ராகுல் (2) களத்தில் உள்ளனர். 3ஆம் நாள் ஆட்டம் தொடங்கும் நேரம் : 9:00 மணி - சேனல் : ஸ்டார் ஸ்போர்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%