பாவங்களை போக்கும் பரணி தீபம்!

பாவங்களை போக்கும் பரணி தீபம்!


கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.


 இனிய சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 


அன்று அதிகாலை 4 மணி அளவில் கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து மாலை 6 மணி அளவில்‌ அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மஹாதீபம் ஏற்றப்படும்‌.


*பரணி தீபம் ஏற்றும் முறை*


திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லங்களிலும், இறைவன்‌ சந்நிதியிலும்‌ மாலை விளக்கேற்றி வழிபட வேண்டும்‌.


அன்று வாசலில் 2 தீபங்களும், பூஜை அறையில் 5 தீபங்களும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லா திசைகளிலும் வெளிச்சம் படும்படி ஏற்ற வேண்டும். நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் இன்னும் சிறப்பு.


மண்‌ விளக்குகளை வீட்டின்‌ வாசல்‌ படிகளில், படிக்கு மூன்று வீதம்‌ ஏற்றி வைப்பது மரபு. வீட்டில்‌ நல்லெண்ணெயிலும்‌, முருகனுக்கு இலுப்பெண்ணெயிலும்‌ விளக்கேற்றி வழிபடுவது நல்லது.


நம் வீட்டு பூஜையறையில்‌ ஒரு முக தீபம்‌ ஏற்றினால்‌ மத்திம பலன்‌ தரும்‌. இரண்டு முக தீபம்‌ ஏற்றினால்‌ குடும்பம்‌ ஒற்றுமை தரும்‌. மூன்று முக தீபம்‌ ஏற்றினால்‌ புத்திர சுகம்‌ தரும்‌. நான்கு முக தீபம்‌ ஏற்றினால்‌ பசு, பூமி சுகம்‌ தரும்‌. ஐந்து முக தீபம்‌ ஏற்றினால்‌ செல்வம்‌ பெருகும்‌ என்பது ஐதீகம்.



சரணம் சரணம் அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையார் பொற்பாதங்கள் சரணம்!


சிவாய நம

சிவமே தவம்

சிவனே சரணாகதி


சித்தமெல்லாம் நமக்கு சிவ மயமே!



அனுப்புதல்:

ப. கோபிபச்சமுத்து,

பாரதியார் நகர்,

கிருஷ்ணகிரி - 1

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%