
பாரிஸ், சென். 23–
பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து, பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அரசு அங்கீகரித்துள்ளது.
நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐ.நா. அமைப்பின் பொது அவைக் கூட்டத்துக்கு முன்னதான உச்சி மாநாட்டில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:–
“இதற்கான நேரம் வந்துவிட்டது, அதனால்தான் நாம் அனைவரும் ஒன்றாகக் கூடியுள்ளோம். இரு நாட்டுத் தீர்வைக் கொண்டு வருவதற்கு நமது அதிகாரத்தில் உள்ள அனைத்தையும் செய்ய வேண்டியது நம்முடைய பொறுப்பு. இன்று பாலஸ்தீனத்தை தனிநாடாக பிரான்ஸ் அங்கீகரிப்பதாக நான் அறிவிக்கின்றேன் என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் பிரான்ஸ் அரசுடன் அன்டோரா, பெல்ஜியம், லக்ஸம்பர்க், மால்டா மற்றும் மொனாக்கோ ஆகிய நாடுகளும் நேற்று பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
ஏற்கெனவே ஐக்கிய நாடுகள் அமைப்பின் 193 உறுப்பு நாடுகளில் 151 நாடுகளின் அரசுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இதன்மூலம் சர்வதேச அளவில் 80 சதவிகித நாடுகளால் பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாலஸ்தீனத்தை அங்கீரிக்க மறுத்த நாடுகள் விவரம்:– இஸ்ரேல், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், கேமரூன், பனாமா, ஹங்கேரி மற்றும் செக் குடியரசு ஆகும். இவற்றில் அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ள பல நாடுகளும் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதை ஏற்க மறுக்கின்றன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?