பிஎச்.டி மாணவர்களின் செயல்முறை விளக்கத்தில் தமிழக ஆளுநர் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு

பிஎச்.டி மாணவர்களின் செயல்முறை விளக்கத்தில் தமிழக ஆளுநர் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு


 

சென்னை: ‘தமிழகத்​தில் ஆராய்ச்சி படிப்பை மேற்​கொள்​ளும் மாணவர்​களின் செயல்​முறை விளக்​கத்​தில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி பங்​கேற்க வேண்​டும்’ என்று அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார். பொது நூல​கத் துறை சார்​பில் சிறப்​பாக செயல்​பட்ட நூல​கங்​கள், நூல​கர்​களுக்கு விருதுகள் வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.


இதில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ், 40 நூல​கர்​களுக்கு டாக்​டர் எஸ்​.ஆர்​.அரங்​க​நாதன் விருது (நல்​நூல​கர் விருது), 25 நூல​கர்​களுக்கு நூலக ஆர்​வலர் விருது (வாசகர் வட்​டம்) ஆகிய​வற்றை வழங்​கி​னார். மேலும், உறுப்​பினர், புர​வலர் மற்​றும் நன்​கொடை அதி​க​மாக சேர்க்​கப்​பட்ட 12 நூல​கங்​களுக்​கும் அவர் கேட​யங்​களை வழங்​கி​னார்.


அதைத்​தொடர்ந்​து, மாணவர்​களுக்கு செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பம் சார்ந்த பயிற்​சிகள் வழங்​கு​வதற்​காக சாம்​சங் நிறு​வனத்​துடன், தமிழக பள்​ளிக்​கல்​வித்​துறை புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டது. இதன்​மூலம் காஞ்​சிபுரம், ராணிப்​பேட்டை ஆகிய மாவட்​டங்​களைச் சேர்ந்த 3,000 மாணவர்​கள் பயனடை​வார்​கள்.


இந்​நிகழ்​வில் பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன், இயக்​குநர் ச.கண்​ணப்​பன், பொது நூல​கத் துறை இயக்​குநர் ச.ஜெயந்​தி, இணை இயக்​குநர் ச.இளங்கோ சந்​திரகு​மார் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.


பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: மாநில கல்விக் கொள்கை அடிப்​படை​யில் புதிய பாடத்​திட்​டத்தை அமல்​படுத்​தும் வித​மாக உயர்​மட்​டக் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இதற்​கான ஆலோ​சனைக் கூட்​டம் 24-ம் தேதி நடை​பெற உள்​ளது.


வரும் கல்​வி​யாண்​டு​களில் புதிய பாடத்​திட்​டத்தை கொண்​டுவர முயற்​சித்து வரு​கிறோம். தமிழகம் எந்​தெந்த துறை​களில் முதன்​மை​யான​தாக இருக்​கிறதோ, அதையெல்​லாம் ஆளுநர் விமர்​சனம் செய்​கிறார்.


ஆராய்ச்​சிப் படிப்​பு​களில் தரம் இல்லை என ஆளுநர் சொல்​வதை ஏற்க முடி​யாது. எங்கே தவறு உள்​ளது என்​பதை சுட்​டிக்​காட்​டி​னால் திருத்​திக் கொள்ள தயா​ராக உள்​ளோம். தரத்தை தெரிந்துகொள்​ளலாம் தமிழகத்​தில் ஆராய்ச்சி படிப்பை மேற்​கொள்​ளும் மாணவர்​களின் செயல்​முறை விளக்க நிகழ்ச்​சி​யில் ஆளுநர் பங்​கேற்று கேள்வி​கள் கேட்க வேண்​டும்.


அப்​போது மாணவர்​கள் சொல்​லும் பதிலில் இருந்து நமது கல்​வி​யின் தரத்தை ஆளுநர் தெரிந்துகொள்​வார். ராமேசுவரம் அருகே மாணவி கொலை​யான விவ​காரத்​தில் சம்​பவம் பள்ளி வளாகத்​துக்கு வெளியே நடந்​துள்​ளது. ஆனாலும், அதுகுறித்து விசா​ரிக்​கப்​படும். அதே​போல், பள்ளி வளாகத்​துக்​குள்​ளும் இது​போன்ற சம்​பவங்​கள் நடை​பெறாமல் இருக்க நடவடிக்​கைகளை எடுத்​து வரு​கிறோம்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%