திமுக ஆட்சியில் தமிழக தொழில்துறை உன்னத வளர்ச்சி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கருத்து

திமுக ஆட்சியில் தமிழக தொழில்துறை உன்னத வளர்ச்சி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கருத்து


 

சென்னை: ‘​தி​முக ஆட்​சி​யில் தமிழகம் தொழில்​துறை​யில் உன்னத வளர்ச்சி அடைந்​துள்​ளது. எனவே எதிர்க்கட்சிகள், அவதூறு அறிக்​கைகளை தவிர்த்து மாநிலத்​தின் நலனில் அக்​கறை செலுத்த வேண்​டும்’ என்று தொழில்​துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா தெரி​வித்​துள்​ளார்.


இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​:தமிழகத்​துக்கு ஒவ்​வொரு முறை​யும் புதிய முதலீடு​கள் வரும்​ போதோ, அறிவிக்​கும்​போதோ ஒரு சில அரசி​யல்​வா​தி​கள் அவதூறுகளை அள்ளி வீசுவதையே வேலை​யாக வைத்​துள்​ளனர். அவர்​களின் குற்​றச்​சாட்​டு​கள் ஆதா​ரமற்​றவை.


கடந்த 2021-ல் திமுக ஆட்சி பொறுப்​பேற்​றது முதல் இது​வரை 1,016 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மூலம் ரூ.11.4 லட்​சம் கோடி மதிப்​பிலான முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டுள்​ளதோடு, 34 லட்​சம் வேலை​வாய்ப்​பு​கள் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளன. இதில், இன்று 80 சதவீதம் அதாவது 809 திட்​டங்​கள் நிலம் ஒதுக்​கீடு, கட்​டு​மானம், சோதனை உற்​பத்​தி, வணி​கரீ​தி​யான உற்​பத்தி என பல்​வேறு நிலை செயல்​பாடு​களில் உள்​ளன.


திட்​டங்​களின் செய​லாக்​கத்​தில் நமது அரசு மிக​வும் தெளி​வாக உள்​ளது. ஆனால், புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களில் உள்​ளபடி முதலீடு​கள் பல கட்​டங்​களாக வரு​வதற்கு ஒருசில ஆண்​டு​கள் ஆகும் என்​ப​தைக்​கூட அறி​யாமல் உளறு​வது நகைப்​புக்​குரியது.


இத்​தகைய குற்​றச்​சாட்​டு​கள் தமிழ்​நாட்டு மக்​களின் முன்​னேற்​றத்​தைச் சீர்​குலைக்​கும் நோக்​கத்​துட​னும், குறுகிய​கால அரசி​யல் நாடகத்​துக்​காக​வும் முன்​வைக்​கப்​படு​கின்​றன. குற்​றச்​சாட்​டுக் குரல் எழுப்​புவோர், கோயம்​புத்​தூர் மற்​றும் மதுரை மெட்ரோ ரயில் திட்​டங்​கள் போன்ற தமிழகத்​துக்​குத் தேவை​யான முக்​கிய உள்​கட்​டமைப்பு திட்​டங்​களுக்கு ஒப்​புதல் தர மத்​தியபாஜக அரசு மறுக்​கும்​போது மவுனம் காப்​பதை வழக்​க​மாகக் கொண்​டுள்​ளனர்.


அதே​போல், தமிழகத்​தில் செமிகண்​டக்​டர் துறைக்​கான நல்ல சூழல் இருந்​த​போதும்​கூட முக்​கிய​மான செமிகண்​டக்​டர் திட்​டங்​கள் வேறு மாநிலங்​களுக்​குத் திருப்​பி​விடப்​படும்​போதும் இவர்​கள் எதிர்ப்​புக் குரல் எழுப்​புவ​தில்​லை.


தமிழ்​நாட்​டின் தொழில் வளர்ச்​சியை ஆதரிப்​ப​தாகக் கூறிக்​கொண்​டே, மறு​புறம் தொழிற்​பேட்​டைகளுக்​கான நிலம் கையகப்​படுத்​து​வதை எதிர்ப்​பதும், விமான நிலைய விரி​வாக்​கம் போன்ற வளர்ச்​சிக்​கான கட்​டமைப்​பு​களை எதிர்ப்​பதும் பெரும் முரண்​பா​டாக உள்​ளது. எனவே, எதிர்க்​கட்​சி​யினர் தங்​களின் குறுகிய அரசி​யல் நோக்​கத்​தைக் கைவிட்​டு, தமிழக நலன் மீது அக்​கறை செலுத்த வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%