பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் பூடான் நாட்டுக்கு சென்றார். அதே நாளில், முன்னாள் மன்னரின் 70-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.
தற்போதைய மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், நேற்று தலைநகர் திம்புவில், காலச்சக்கர அபிஷேகம் செய்யும் சடங்கு நடந்தது. அதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக்குடன் இணைந்து காலச்சக்கர அபிஷேக சடங்கை தொடங்கி வைத்ததில் பெருமை கொள்கிறேன். உலகம் முழுவதும் உள்ள புத்த மதத்தினருக்கு இது கலாசார முக்கியத்துவம்வாய்ந்த முக்கியமான சடங்கு.
தற்போது நடந்து வரும் சர்வதேச அமைதி பிரார்த்தனை திருவிழாவின் ஒரு பகுதியாக இது நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடி ஒரு தேர்ச்சி பெற்ற ஆன்மிக குரு. அவர் காலச்சக்கர அபிஷேகத்தை தொடங்கி வைத்து, அதை ஆசிர்வதித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?