பிறர் பொருள் விரும்பாதே

பிறர் பொருள் விரும்பாதே


குன்றாக குவித்தபொருள்

 குறையாது இருக்க..

நன்றாக நீடுவாழ..

  வழிஇதுவே அறிவாய்!


என்றேனும் ஒருநாள்

 இருப்பது மறையலாம்!

இன்றேனும் அறிகவே

  பிறர்பொருள் விரும்பாதே!


ஓன்றேசெய்! அதுவும்

 இன்றேசெய் போதும்..

என்றுமே அடுத்தவர்

 பொருளாசை வேண்டாம்!


வென்றவர்கள் செல்லும்

  பாதையினை அறிக..

பிறனபொருள் விரும்பா

 பெருவழியை தொடர்க!


மேலெதுவோ.. கீழாம்..

 கீழ்எதுவோ மேலாம்..

காலத்தின் சக்கரம்

 சுழன்றிடக் கண்டேன்.!


நாளொன்று போனால்

 வயதொன்று போகும்..

நாள்வரும் முன்னே

  நன்றாக அறிவாய்!


வாளென்று உலகில்

 பிறர் பொருளாகும்..

வருவதை அறிந்தால்

 பயணம் இதமாகும்!


ஆலொன்றைப் பாராய்

 கிளையெல்லாம் பறவை..

அடுத்தவர்கள் பொருளை

  விரும்பாதே பெருமை!


*வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%