" உன் கோபம்
என்னை சிதறடித்து
அலையவிடுகிறது .... "
அது மெய் கோபம்
இல்லை பொய்
கோபம் என்பதும்
எனக்கும் புரியும் .... "
இருந்தும் உன்
முகம் பார்த்து
ரசிக்க இதுவும்
ஒரு வழி தானே
கண்ணே ..."
அலை அலையாய்
உன் ஒய்யார
நடை அசைந்தாடும்
பின்னல் கூட
கதை சொல்லும் ... "
உன் இதழ்கள்
துடிப்பிற்கு ஒரு
கவிதை எழுதினேன் ..."
உன் இளமை
துடிப்பு பேரழகிற்கு
தொடர் கதை
எழுதினேன் .... "
உன் நாணம்
வெட்கம் நளினம்
சிந்தும் புன்னகை
சீறும் கண்கள்
பார்க்க பார்க்க
திகட்டாத புத்துணர்ச்சி ..."
நித்தம் உன்
தரிசனம் கண்டு
என் மனம்
சித்தம் கெட்டு
பித்தம் பெருகி
அலையுதே ..."
காரணம் என்ன
நீ சொல்
என்னவளே
கண்மணியே ..."
- சீர்காழி. ஆர். சீதாராமன் .
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?