பிஹார் தொழிலாளிக்கு கை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்களுக்கு துணை முதல்வர் நேரில் பாராட்டு

பிஹார் தொழிலாளிக்கு கை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்களுக்கு துணை முதல்வர் நேரில் பாராட்டு


 

சென்னை: பிஹார் தொழிலா​ளிக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்​றிகர​மாக கையை பொருத்​திய ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை மருத்​து​வர்​களை நேரில் அழைத்து துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பாராட்டினார்.


பிஹாரைச் சேர்ந்த 28 வயது தொழிலாளி கடந்த செப்​.26-ம் தேதி சென்னை பூங்கா ரயில் நிலை​யம் அருகே தண்​ட​வாளத்தை கடக்க முயன்​ற​போது விபத்​தில் சிக்​கி​னார்.


இந்த விபத்​தில் அவரது இடது கை தோள்​பட்​டையி​லிருந்து முழங்கை வரை மிக மோச​மாக சிதைந்​து​போனது. அதே​போல், வலது கை மணிக்​கட்டு பகு​திவரை சிதைந்​திருந்​தது. இதையடுத்து ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.


இரண்டு கைகளும் சிதைந்​திருந்த நிலை​யில் அவருக்கு இடது கையில் மணிக்​கட்​டிலிருந்து கீழே உள்ள பகு​தியை வலது கையோடு இணைத்​து, கரங்​களை மாற்றி பொருத்​தும் அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​டது.


அந்த சிக்​கலான, சவால் மிகுந்த அறுவை சிகிச்​சையை ராஜீவ் காந்தி அரசு மருத்​து​வ​மனை​யின் ஒட்​டுறுப்பு அறுவை சிகிச்சை துறை தலை​வர் பி.​ராஜேஸ்​வரி தலை​மையி​லான குழு​வினர் மேற்​கொண்​டனர்.


சிகிச்​சை​யில் ரத்​தக் குழாய் மறுசீரமைப்பு முடிந்​தவுடனேயே இணைக்​கப்​பட்ட கை புத்​து​யிர் பெற்​றது. இந்த சவால் மிகுந்த அறுவை சிகிச்​சையை மேற்​கொண்ட மருத்​து​வர்​களை சென்னை முகாம் அலு​வல​கத்​துக்கு அழைத்து துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று பாராட்​டி​னார்.


இந்​நிகழ்​வில் சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை முதல்​வர் சாந்​தா​ராமன் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.


இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட பதி​வில், “சென்​னை​யில் பணி​யாற்றி வந்த பிஹார் தொழிலாளி எதிர்​பா​ராத​வித​மாக ரயில் விபத்​தில் சிக்கி கைகளை இழந்த நிலை​யில், அவருக்​கு, ராஜீவ்​காந்தி மருத்​து​வர்​கள் தொடர் சிகிச்சை அளித்து அவரின் இடது கையை வலது முழங்​கை​யுடன் இணைத்து சாதனை படைத்​துள்​ளனர்.


மிக அரி​தான கரங்​களை மாற்றி பொருத்​தும் அறுவை சிகிச்சை நமது நாட்​டில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் நிகழ்த்​தப்​பட்​டது இதுவே முதல்​முறை. இந்த அறுவை சிகிச்​சையை திறமை​யாக செய்த மருத்​து​வர்​களுக்கு பாராட்​டு​கள்” என்று தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%