புகையில்லா போகி விழிப்புணர்வு

புகையில்லா போகி விழிப்புணர்வு



 காவேரிப்பட்டினம் ஒன்றியம் தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் (EEP) சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்து லட்சுமணன் தலைமை தாங்கினார். ஆசிரியர் மனோகரன் வரவேற்புரை ஆற்றினார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் கவிதா புகையில்லா போகி என்ற தலைப்பில் நெகிழி, பழையதுணிகள் மற்றும் பழைய பொருட்களை போகிப்பண்டிகையின்போது எரித்து சுற்றுச்சூழலில் மாசுக்கள் ஏற்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி பேசினார். மேலும் பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிறைவாக தமிழாசிரியர் திருமலை நன்றி நவீல கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%