புட்டபர்த்தி சாய்பாபா நூற்றாண்டு விழா படத் தொகுப்பு வெளியீடு...!*

புட்டபர்த்தி சாய்பாபா நூற்றாண்டு விழா படத் தொகுப்பு வெளியீடு...!*



திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் புட்டபர்த்தி சாய்பாபா நூற்றாண்டு பிறந்தநாள் விழா தொகுப்புப்படம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சாய்பாபாவின் ஆன்மீக பெருமைகளையும், சமூக செயல்பாடுகள் பற்றியும் கருத்துரைகள் வழங்கப்பட்டது. அவருடைய படத்தொகுப்பை புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து வெளியிட, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் பெற்றுக் கொண்டார். மேலும் கல்லூரி பொருளாளர் எஸ்.பழனிச்சாமி, இயக்குனர்கள் டிகேஜி.ஆனந்தன், டிடிகே. ராதா, எஸ். அப்பாண்டைராஜ், சங்கரன், பா.சுரேஷ், சிவ பொன்முடி, வெள்ளிமேடு பேட்டை மருத்துவர் மௌ.சத்திய சொருபன், சின்ன நெற்குணம் தன்மேந்திரா ரெட்டியார், திரைப்பட துணை இயக்குநர் முகமது ஜியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை நன்றி கூறினார்.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%