புண்ணியம் தேடுவோம்

புண்ணியம் தேடுவோம்


டிசம்பர் மாதம் முதல் நாள்,தமிழ் மாதம் கார்த்திகை 16 ம் நாள் 

விருச்சிக மாதம் 15 ம் நாள்

குருவாயூர் ஏகாதசி

கைசிக ஏகாதசி ,மோக்ஷ ஏகாதசி,

பிரபோதினி ஏகாதசி என பல பெயர்களில் பக்தர்களால் அனுசரிக்கப் படும் தினம்.



ஏகாதசி என்று அழைக்கப்படும் நாளானது, பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களுக்கு இடையிலே பதினொன்றாம் நாளைக் குறிப்பதாகும். இது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வரும், முக்கியமான விரத நாளாகும். வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசிகள் நிகழ்கின்றன.

குருவாயூர் ஏகாதசி நாள் கார்த்திகை/விருச்சிக மண்டல காலத்தில் வரும் ஏகாதசியாகும்.

இந்த புண்ணிய தினத்தின் முக்கியத்துவத்தைக் காண்போம்.


க்ஷீரசாகரத்தில் அனந்தசயனனாக பள்ளி கொள்ளும் பகவான் யோகநித்திரையிலிருந்து எழுந்து லஷ்மி தேவியோடு நம்மை அனுக்கிரகிக்கும் மகா புண்ணிய தினம்.


அறநெறியையும், அறநெறியில் 

உள்ளவர்களையும் காக்கவும்,அதர்மத்தையும்,

அதர்ம வழியில் உள்ளவர்களையும் அழிக்கவும்

பகவான் அவதாரம் செய்கிறார்.


அவ்வண்ணமே பூரண அவதாரம் எடுத்த ஶ்ரீ கிருஷ்ண பகவான் பல அவதார லீலைகள் செய்த புண்ணிய தினம்.


பகவத்கீதையை அருச்சுனனுக்கு பகவான் உபதேசம் செய்த புண்ணிய தினம்.


தேவேந்திரன் சுரபியாகிய காமதேனுவுடன் 

பிருந்தாவனத்தை அடைந்து பகவானை துதித்தும், காமதேனு பால் சுரந்து கோவிந்தாபிஷேகம் நடத்திய மகா புண்ணிய தினம்.


குருவாயூர்க்ஷேத்திரப் பிரதிஷ்டா தினம்.


அத்வைதத்தின் குருவும், சைவ அவதாரமுமான ஆதிசங்கரர் குருவாயூர் கோவிலில் வந்து, இன்று நடைபெறும் பூஜா நிஷ்டைகளை உருவாக்கிக் கொடுத்த மகா புண்ணிய தினம்


குருவாயூர் கோவிலில் தாந்த்ரீக சடங்குகள் ஒன்றும் இல்லாமல் பகவான் பக்த ஜனங்களை நேரில் வந்து அனுக்கிரகம் செய்ய வெளியே வரும் புண்ணிய தினம்.


பக்தரில் உத்தமர்களாகிய மேல்பத்தூர், பூந்தானம், ஆதிசங்கரர், குரூரம்மா, வில்வமங்கலம் சுவாமிகள் போன்றவர்களுக்கு பகவத் தரிசனம் கொடுத்த மகா புண்ணிய தினம்.


செம்பை வைத்தியநாத பாகவதருக்கு இழந்த குரலை மீண்டும் பகவான் அருளிய மகா புண்ணிய தினம்.


செம்பை வைத்தியநாத பாகவதர் தனது சீடர்களுடன் குருவாயூரில் வந்த சங்கீத ஆராதனை நடத்திய மகா புண்ணிய தினம்.

இன்றும் ஆராதனை நடந்து வருகிறது.


குருவாயூர் ஶ்ரீகோவில் இன்று முழுவதும் தரிசனத்துக்காக திறந்திருக்கும் புண்ணிய தினம்.


பக்தர்கள் ஆராதிக்கும் , பகவானின் அருள் கொண்ட குருவாயூர் கேசவன் என்னும் யானை பகவானை அடைந்த தினம்.


மேல்பத்தூர் பட்டத்திரிப்பாடு தான் எழுதிய நாராயணீயம் என்னும் கிரந்தத்தை பகவானுடைய சன்னதியில் சமர்ப்பணம் செய்த மகா புண்ணிய தினம்.


கார்த்திகை — வளர்பிறை ஏகாதசி — பிரபோதின ஏகாதசி-- கைசிக ஏகாதசி — அனைத்துப் பழங்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து நவ வித பக்தியால் இறைவனை வேண்டிக் கொண்டால் இறையருளடன் மங்கல வாழ்வு மலரும்.


ஏகாதசி விளக்கு என பதினைந்து நாட்கள் குருவாயூர் கோவிலில் கோலாகலமாக நடக்கும் இந்த குருவாயூர் ஏகாதசி மகத்துவம் அறிந்து,

விரத விதிகளை பாராட்டி அனுசரித்து 

'நான்''எனது'என்ற அகந்தை இல்லாமல் 'சர்வம் கிருஷ்ணார்ப்பணம்' என்ற கோவிந்த நாமத்தை வணங்கி நற்கதி பெறுவோம்🙏🏻



சோபனா விச்வநாதன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%