புத்தொழில் மாநாட்டில் ரூ. 127 கோடி அளவிற்கான முதலீடுகள் ஈர்ப்பு

புத்தொழில் மாநாட்டில் ரூ. 127 கோடி அளவிற்கான முதலீடுகள் ஈர்ப்பு



சென்னை, அக். 18 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை மாநகரில் தொடங்கி வைத்த உலகப் புத்தொழில் மாநாடு 2025 மகத்தான வெற்றி பெற்றுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில், 115 முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் முன்பு, 453 புத்தொழில் நிறுவனங்கள் தங்க ளது நிறுவனங்களை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் முதலீட்டு வாய்ப்புகள், வழிகாட்டுதல் மற்றும் இணைப்பு முயற்சிகள் உருவாகின. மாநாட்டுக்கு முன்பாக ரூ. 127.09 கோடி முதலீட்டு உறுதிப்பாடு கிடைத்தது. மேலும் பல ஒப்பந்தங்கள் அடுத்த மாதங்களில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படு கிறது என்று அரசு தெரிவித்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பிரான்ஸ் நாட்டின் லிங்க் இன்னோவேஷன்ஸ், கனடா நாட்டின் ஆர்எக்ஸ்என் ஹப், ஜெர்மனி நாட்டின் ஆசியா பெர்லின் அமைப்பு உள்ளிட்ட பன்னாட்டு தொழில் அமைப்புகள் மற்றும் முன்னணி கார்ப்பரேட் நிறுவ னங்கள் பலவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு நாட்களில் மொத்தம் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜே. ஜெயரஞ்சன் 22 நிறுவனங்களில் தொடக்கநிலை தொழில் வளர் காப்ப கங்களை அமைக்க ஆணைகளை வழங்கினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%