
சென்னை, அக்.18 - மின் நுகர்வு மற்றும் விற்பனை வரிச் சட்டம், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. நுகர்வு மற்றும் விற்பனை விதிகள், தமிழ்நாடு நெடுஞ் சாலைகள் சட்டம் ஆகியவற்றை மீறுவோருக்கு சிறைத் தண்டனை, அபராதம் போன்ற குற்றவியல் தண்டனைகள் நடைமுறையில் இருந்தன. அவற்றுக்குப் பதிலாக நிர்வாகம் சார்ந்த தீர்ப்பு முறை மூலமாக பணம் சார்ந்த உரிமையியல் ரீதியான தண்டத் தொகைகள் மட்டுமே இனி விதிக்கப்படும். இத்தகைய சட்டத் திருத்த மசோதாக்களை பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் தாக்கல் செய்த னர். இந்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறின.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?