ராசிபுரத்தில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி முகாம்

ராசிபுரத்தில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி முகாம்


ராசிபுரம், அக். 19–


ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி பள்ளி வளாகத்தில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட முகாம் நடைபெற்றது.


தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை திருக்குறளை மாணவர்களிடையே கொண்டு செல்லும் வகையில் திருப்பணிகள் திட்டம் கொண்டுவரப்பட்டு, வாரந்நோறும் திருக்குறள் திருப்பணிகள் திட்டம் நடத்தப்படுகிறது.


இதனை தொடர்ந்து ராசிபுரம் தமிழ் கழகம் சார்பில் ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 9-வது வாரமாக நடைபெற்ற விழாவில் நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை துணை ஆய்வாளரும், தமிழ் கழகச் செயலாளருமான கை.பெரியசாமி தலைமை வகித்து, "வள்ளுவன் தன்னை உலகினுக்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு " என்ற தலைப்பில் பேசினார்.


பயிற்சி முகாமில், சிறப்பு அழைப்பாளராக பாவை வித்யாஷ்ரம் மேல்நிலை ப்பள்ளியின் கா.நித்யா, தொ.ஜேடர் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு வள்ளுவரின் குறளின் மேன்மையை எடுத்துக் கூறினார்.


இதில் கருத்தாளர்களாக ராசிபுரம் தமிழ் கழகத் தலைவர் பி.தட்சிணாமூர்த்தி, வாகை மனோஜ்குமார் ஆகியோர் கதைகள் வாயிலாகவும், நடப்புகளின் வாயிலாகவும் கற்பித்து மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சியளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நகராட்சி நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் கு.பாரதி, தமிழ் கழகப்பொருளாளர் வீ.ரீகன் ஆகியோர் செய்திருந்தனர். ராசிபுரம் தமிழ்க் கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் தலைவர் சுதாகர் நன்றி கூறினார்.--


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%