புயல் எச்சரிக்கை தடை முடிந்து கடலுக்கு சென்ற மீனவருக்கு அடித்த அதிர்ஷ்டம்
காரைக்கால்,
புயல் எச்சரிக்கை காரணமாக கடலுக்கு செல்லாத நிலையில், 8 நாட்களுக்கு பிறகு காரைக்கால் மீனவர்கள் கடந்த 29-ந்தேதி கடலுக்கு சென்றனர். 4 நாட்கள் கடலில் தங்கி மீன் பிடித்த மீனவர்கள், இன்று கரைக்கு திரும்பினர். பல வகையான மீன்கள் கிடைத்திருந்தாலும், காரைக்காலை சேர்ந்த மீனவர் ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
அதாவது, அவரது வலையில் 50க்கும் அதிகமான பெரிய கூரை கத்தாழை மீன்கள் சிக்கியது. இவ்வகை மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்குவது அரிது. ஒன்றிரண்டு மீன்கள்தான் அவ்வப்போது சிக்கும். இந்த மீன்கள் மருத்துவத்துக்கு அதிகம் பயன்படுவதால், இதன் விலை அதிகமாகும். அதேபோல இந்த மீன்களின் தேவையும் அதிகம். கிலோ ரூ.1,000க்கும் மேல் விற்கப்படும்.
இன்று துறைமுகத்தில் இந்த மீன்கள் வைக்கப்பட்டபோது, அதனை வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். வங்கக்கடலில் 200க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வேறு யாருக்கும் சிக்காமல் காரைக்கால் மீனவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் 50க்கும் மேற்பட்ட பெரிய மீன்கள் சிக்கியது. இந்த மீன்களை பொதுமக்களும், வியாபாரிகளும் வியந்து பார்த்து சென்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?