புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!
Sep 17 2025
46

வேலூர்,செப்.18-
புரட்டாசி மாதம் பிறந்ததை முன்னிட்டு பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வேலூர் மாவட்டம் ,பழைய காட்பாடியில் பெருமாள் கோவில் தெருவில் பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலில் கடந்த 4ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது .இதை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறந்தது. புரட்டாசி மாதம் பிறந்ததை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு காலை முதற்கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதை தொடர்ந்து மலர்களால் அலங்ககாரம் செய்யப்பட்டு ஸ்ரீ பலராமன் அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசித்தனர். பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் ஐயர்கள் சந்தோஷ் மற்றும் சிவக்குமார் செய்திருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?