" கதிரவனுக்கு ஓய்வு
தலைக்காட்ட
அவசியமில்லை
கனமழை
மேகமூட்டம்..."
மழைச் சிதறலில்
தெரிக்குது மனம்
பசுமையின் வீரம்
மனங்களின் தாகம் ..."
இயற்கையின் ஏக்கம்
அதில் எழும்
சங்கீத நாதம் .... "
மரங்களின் சங்கமம்
பறவைகளின்
சுதந்திரம்...."
பொங்கி எழும்
சில்லென்ற காற்று
விலங்குகளுக்கும்
பறவைகளுக்கும்
விடுதலை .... "
சுயநல மனிதனுக்கு
மட்டும் பெருந்தடை
இயற்கையை
நேசித்து விடு ..."
தூய காற்றை
சுவாசித்திடு
மனிதா வேண்டாம்
சுயநலம்...."
நீயும் சுதந்திரமாய்
விடுதலை பெற்று
வாழ்ந்திடு பிறரை
வாழ விடு .... "
உலகம் உனக்கு
மட்டும் அல்ல
அனைவருக்கும்
சொந்தம் என்பதை
புரிந்து நட ..."
- சீர்காழி. ஆர். சீதாராமன்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?