எத்தனை ரகம்

எத்தனை ரகம்



  " காக்கைக்கு

    பிண்டம் உணவு

    மயிலுக்கு அரிசி

    உணவு ..."


    எறும்புக்கு கைப்பிடி

    அரிசி பசுவிற்கு

    அகத்திக்கீரை ..."


     பாம்பிற்கு பால்

     குரங்கிற்கு பழம்

     ஆட்டிற்கு வாழை

      இலை .... "


     அணிலுக்கு சுவைக்க

     பழங்கள்

     மரநாய்க்கு

     இளநீர் ..."


     பன்றிக்கு கிழங்கு

     நாய்க்கு பிஸ்கட்

     குதிரைக்கு கொள்ளு

     மனிதனுக்கு டீ ..."


      மிருகங்களுக்கு

      அருந்த நீர்

      கொக்கிற்கு மீன்

      பாம்புக்கு தவளை..."


      மீனுக்கு மண்புழு

      வண்டுக்கு தேன்

      குருவிக்கு கூடு

      பல்லிக்கு பூச்சி .... "


      வவ்வாலுக்கு பழம்

      கிளிக்கு நெல்

      குழந்தைக்கு தாய்ப்பால் .... "


      கொலுவுக்கு சுண்டல்

      இறைவனுக்கு 

      பிரசாதம் ..."


      அப்பப்பா எத்தனை

      விதம் எத்தனை

      ரகம் அத்தனைக்குள்ளும்

      உண்டு ஈரம் ... "


    - சீர்காழி. ஆர். சீதாராமன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%