பூக்களை பறிக்காதீர்கள்

பூக்களை பறிக்காதீர்கள்


பூக்களை நான் எப்போதும் பறிப்தில்லை.

அதை ஒரு கொலை எனவே நினைத்திருந்தேன்—

வேரிலிருந்து பிரித்து தூக்கிவிடும்

ஒரு தலை வெட்டும் பாவச்செயல் போல.


அழகை பிரித்து,

அன்பை பறித்து,

கண்ணுக்கு குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக

ஒரு உயிரை தியாகம் செய்ய வைத்ததை

மன்னிக்க முடியாமல் இருந்தேன்.


ஆனால்…


உன் கூந்தலில் அவை

சிறு குழந்தை போல

மழலை நகையுடன்

துள்ளித் துள்ளி ஆடியதைப் பார்த்த பின்

என் நம்பிக்கை மாறியது.


அவை உனக்காகவே பூத்ததோ,

உன் கூந்தலில் ஒரு நாள் வாழ்ந்தாலே

பிறவி பயன் அடைகிறதோ

என்று தோன்றியது.


அப்போது உணர்ந்தேன்—

பூவும் சாகவில்லை;

அது ஒரு நாள்

உன் அழகின் ஓரமாக

உயிர்த்தெழுந்தது.


அதற்குப் பிறகு…

பூக்களை நான் ரசிக்கத் தொடங்கினேன்.

உன்னை நினைக்கும் அளவுக்கு ..


எனவே…

பூக்களை பறிக்காதீர்கள்.

அவை என்னவளின் கூந்தலைத் தேடி

தவம் போல காத்திருக்கின்றன.


விட்டு விடுங்கள்…

அவற்றின் வாழ்க்கை விடியட்டும்;

ஒருநாள் அவள் புன்னகைக்கு அருகில்

அவை தங்கள் பிறவி பயனை காணட்டும்.


---

ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%