பூர்த்தி செய்த வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தினை பதிவேற்றம் செய்யும் பணிகள்திண்டுக்கல் கலெக்டர் சரவணன் ஆய்வு
Nov 28 2025
19
பழனி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து மீளப் பெறப்படும் வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவத்தினை பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் செ.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் 2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் 96.7% வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது அப்படிவங்களை பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் 04.12.2025 வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
விழிப்புணர்வு பேரணிகள்
இப்பணியில் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் (SVEEP) கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரிப்பட்டி மற்றும் கோதைமங்கலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 கணக்கெடுப்பு படிவத்தினை, வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து மீளப் பெறப்படும் பணிகளையும், சிவகிரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பழனி நகராட்சி அலுவலகம் மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து மீளப் பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தினை பதிவேற்றம் செய்யும் பணிகளையும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் செ.சரவணன் நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்வுகளின் போது, பழனி வட்டாட்சியர் பிரசன்னா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சஞ்சைகாந்தி ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?