திருவாரூர் மாவட்டத்தில் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும்: எஸ்பி அறிவுறுத்தல்
Nov 28 2025
20
திருவாரூர் மாவட்டத்தில், ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் காவல்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில், இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்துப் பணிகளை போலீசார் அதிகரிக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தெரிவித்தார். இது குறித்த மாதாந்திர கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமை வகித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) ஜே. செட்ரிக் மேனுயுவல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தில் கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், விசாரணையில் முன்னேற்றம், நிலுவையில் உள்ள வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான குற்றங்கள், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சாலை விபத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சட்டவிரோத நடவடிக்கையை
தடுக்க வேண்டும்:
தொடர்ந்து, எஸ்.பி. கருண் கரட் பேசியதாவது:-
குற்றங்களை தடுக்கும் விதமாக இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்துப் பணிகளை அதிகப்படுத்த வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையை அதிகரித்து, சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என பேசினார்.
சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு, சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும், கடந்த மாதம் சிறப்பான பணி செய்ததற்காக 16 காவல் அதிகாரிகள் மற்றும் 16 ஆளுநர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சைபர் குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருள்செல்வன், அனைத்து உட்கோட்டத் துணைக்கால் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?