பவானி, நகரில் நடக்கும் ஒரு ஃபங்ஷனுக்காக புறப்பட்டாள். கோமதி அம்மாளின் வீட்டை தாண்டிச் செல்லவேண்டி யிருந்தது. அவர் வீட்டை நெருங்கிய சமயம் ஏதேதோ யோசனையில் இருந்தவள் அந்தக் காட்சியைக் கண்டு ஆத்திரமடைந் தாள்.
உடனே சட்டென கோமதி அம்மாளின்
வீட்டில் நுழைந்து அழைப்பு மணியை
அழுத்தினாள். சில வினாடிகளில் கத
வைத் திறந்து பார்த்த கோமதி அம்மா
ள் முகம் மலர்ந்து , " வா பவானி ! எங்க இவ்வளவு தூரம் ?" என்றார்.
" ஒரு ஃபங்ஷனுக்காக போய்கிட்டி ருக்கேன். ..ஆன்டி ! கொஞ்சம் வெளி யே வாங்க ! வந்து நடக்குற அநியா
யத்தை உங்கக் கண்ணால் பாருங்க."
பவானி அழைக்க ஒன்றும் புரியாமல்
வெளிப்பட்டார் கோமதி அம்மாள்.
" ஆன்டி ! அங்கப் பாருங்க ! உங்க வீட்டுல பூத்திருக்குற செவ்வரளி பூக்கள யாரோ பரிச்சுக்கிட்டுப் போறாங்க ! " பவானி கை நீட்டி காட்ட, ஒரு பெரியவர் பூ பறித்த கையோடு நடையைக் கட்டினார்.
" இவ்வளவுதானா ! நான் என்னவோ ஏதோன்னு பயந்து போயிட்டேன் !" வெகுகூலாக கூறிய கோமதி அம்மா ளை வியப்புடன் பார்த்த பவானி , " என்ன ஆன்டி, இப்படிசொல்லிட்டீங்க ? எவ்வளவு கஷ்டப்பட்டு வளக்கறீங்க ! பலனை யாரோ அனுபவிக்கிறாங்க ! இது அநியாயமில்லையா ?" என்றாள் மனசு தாளாமல்.
கோமதி முறுவலித்தார். " பவானி ! நான் பூக்கள் வளர்க்கறதே மத்தவங் களுக்காகத்தான் ! "
பவானி புருவம் நெருக்கியபடி கோ
மதி அம்மாளையே கண் கொட்டா மல் பார்த்த வண்ணம் நின்று கொண்டி
தாள்.
கோமதி தொடர்ந்தார்.
" யெஸ்...ஆரம்பத்தில பூத்தொட்டி , பூங்கன்று வாங்க கொஞ்சம் செலவு. அவ்வளவுதான். அதுக்கப்புறம் தினமு ம் தண்ணீர் ஊற்றினால் அதுபாட் டுக்கு வளரும். நல்லா வளர்ந்து பூக்கள் பூக்கும். பூக்களை ரோடுல போறவங்க பறிச்சுக்கிடட்டும்னு விட்டுடுவேன். நீ இன்னிக்கு மட்டும் தான் பார்த்தே. தினமும் சில பேர் வருவாங்க. பூக்களைப் பறிச்சுக் கிட்டு போவாங்க. ஏதோ என்னாலமுடிஞ் சது...அதுல ஒரு சேடிஸ்ஃபாக்ஷ்ன். மன நிறைவும் கூட . இப்போ உனக்கு
புரிஞ்சிருக்கும். நீ யூம் கன்வின்ஸ் ஆகியிருப்பே. ஆம் ஐ கரெக்ட் ?"
" யெஸ் ஆன்டி !" எனக் கூறிச் சிரித்த
பவானிக்கு, கோமதி அம்மாளின் ' பூ
மனம் ' புரிந்தது.
வி.கே.லக்ஷ்மிநாராயணன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?