பெங்களூருவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து விற்ற 5 பேர் கைது
Oct 16 2025
15

பெங்களூரு,
பெங்களூருவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கர்நாடகத்தில் பிரான்காப்-சி, எடெக்ஸ் சி.டி. உள்ளிட்ட சில இருமல் மருந்துகள் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தாவணகேரே(மாவட்டம்) டவுன் தேவராஜ் அர்ஸ் படாவனே பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே 5 பேர் நின்று கொண்டு சிறிய கடை அமைத்து இருமல் மருந்துகள் விற்றுக் கொண்டிருப்பதாக தாவணகெரே டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது, அது மாநில அரசால் தடை செய்யப்பட்ட இருமல் மருந்துகள் என்பது தெரியவந்தது.
அதையடுத்து அவற்றை விற்ற எஸ்.பி.எஸ். நகரைச் சேர்ந்த சிவக்குமார், மெகபூப் நகரைச் சேர்ந்த அஜிமுதீன், தேவராஜ் அர்ஸ் படாவனேயைச் சேர்ந்த முகமது சாரிக், சென்னகிரி தாலுகா ஹொன்னேபாகி கிராமத்தைச் சேர்ந்த சையது பாபு மற்றும் அப்துல் கபர் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.1¼ லட்சம் மதிப்பிலான இருமல் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?