பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில்  ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

முல்லாப்பூர், செப்.15-


ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நேற்று நடந்தது.


‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பிரதிகா ராவல், துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா அரைசதத்தை கடந்து வலுவான அஸ்திவாரம் ஏற்படுத்தி தந்தனர். ஸ்கோர் 114-ஐ எட்டிய போது மந்தனா 58 ரன்னில் ரன்-அவுட் ஆனார். சற்று நேரத்தில் பிரதிகா ராவல் 64 ரன்னில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து வந்த வீராங்கனைகளில் ஹர்லீன் தியோல் (54 ரன்) மட்டும் கணிசமான பங்களிப்பை அளித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (11 ரன்) சோபிக்கவில்லை. 50 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 281 ரன்கள் சேர்த்தது.


தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 44.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போபி லிட்ச்பீல்டு (88 ரன்), பெத் மூனி (77 ரன்), அனபெல் சுதர்லாண்ட் (54 ரன்) அரைசதம் அடித்தனர்.


இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%