பெண் பைக் டாக்ஸி ஓட்டுநரிடம் பாலியல் அத்துமீறல்: சென்னையில் இளைஞர் கைது

பெண் பைக் டாக்ஸி ஓட்டுநரிடம் பாலியல் அத்துமீறல்: சென்னையில் இளைஞர் கைது

சென்னை: ஓட்​டேரி பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒரு​வர் பைக் டாக்​ஸி ஓட்டி வரு​கிறார். நேற்று முன்​தினம் மதி​யம், கோயம்​பேடு முதல் அரும்​பாக்​கம், எம்​.எம்​.டி.ஏ. வரை செல்ல ஓர் அழைப்பு வந்​தது. அந்த வாடிக்​கை​யாளரை செல்​போனில் தொடர்பு கொண்​ட ​போது எதிர்​முனை​யில் பேசிய இளைஞர் தனது தாயாரை அழைத்​துச் செல்லபுக் செய்​த​தாக தெரி​வித்​தார்.


இதையடுத்து அந்த பெண் அங்கு சென்​ற​போது, அங்கு நின்​றிருந்த இளைஞர், ‘நான்​தான் சவாரிக்​காக அழைத்​தேன். கல்​லூரிக்கு நேர​மாவ​தால் என்னை கல்​லூரி​யில் இறக்​கி​விடுங்​கள்’ என்று கேட்​டுக் கொண்​டார். முதலில் தயங்​கிய அந்த பெண், பின்​னர் அழைத்​துச் செல்ல சம்​ம​தித்து அந்த இளைஞரை இருசக்கர வாக​னத்​தில் ஏற்​றிச் சென்​றார்.


வாக​னம் சென்று கொண்​டிருந்​த ​போது பின்​னால் அமர்ந்​திருந்த இளைஞர் வாக​னத்தை ஓட்​டிச் சென்ற இளம் பெண்​ணிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​படத் தொடங்​கி​னார். இதனால் கோபமடைந்த அந்த பெண் வாக​னத்தை சாலை​யோரம் நிறுத்​தி, இளைஞரைக் கண்​டித்​தார். இதனால், பயந்​து​போன அந்த இளைஞர் அங்​கிருந்து தப்பி ஓடி​னார்.


இந்த விவ​காரம் தொடர்​பாக பாதிக்​கப்​பட்ட பெண் அரும்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் பெண் வன்​கொடுமைதடுப்​புச் சட்​டம் உட்பட மேலும் சில பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில், பெண் பைக் டாக்ஸி ஓட்​டுநரிடம் பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​டது அமைந்​தகரையைச் சேர்ந்த இம்​ரான் (19) என்​பதும், இவர் ராயப்​பேட்​டை​யில் உள்ள கல்​லூரி​யில் படித்​து​ வரு​வதும் தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவரை போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%