பெரம்பலூர் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான கபடி, ஹாக்கி போட்டிகளில் அரசு பள்ளிகள் முதலிடம்

பெரம்பலூர் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான கபடி, ஹாக்கி போட்டிகளில் அரசு பள்ளிகள் முதலிடம்



பெரம்பலூர், அக். 19- பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் பாரதியார் தினம், குடியரசு தின விழாவை முன்னிட்டு, பள்ளி கல்வித்துறையின் சார்பில், மாவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ், கபடி, கைப்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் குறு வட்ட அளவில் முதலிடத்தை பிடித்த அணிகள், வீராங்கனைகள் விளையாடினர். ஹாக்கி போட்டியில் 14, 19 வயது பிரிவுகளில் சிறுவாச்சூர் அரசு மேல்நிலை பள்ளியும், 17 வயது பிரிவில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியும் முதலிடம் பிடித்தன. டேபிள் டென்னிஸ் போட்டி ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில் 14 வயது ஒற்றையர், இரட்டையர் மற்றும் 19 வயது இரட்டையர் பிரிவுகளில் பெரம்பலூர் மரகதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், 17 வயது ஒற்றையர், இரட்டையர் மற்றும் 19 வயது ஒற்றையர் பிரிவுகளில் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியும் முதலிடம் பிடித்தன. கபடி போட்டியில் 14 வயது பிரிவில் தேனூர் அரசு மேல்நிலை பள்ளியும், 17 வயது பிரிவில் காரை அரசு மேல்நிலை பள்ளியும், 19 வயது பிரிவில் துங்கபுரம் அரசு மேல்நிலை பள்ளியும் முதலிடம் பிடித்தன. கைப்பந்து போட்டியில் 14 வயது பிரிவில் திருமாந்துறை புனித ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், 17, 19 வயது பிரிவுகளில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியும் முதலிடம் பிடித்தன. பள்ளி மாணவர்களுக்கான கோ-கோ போட்டி நடத்தப்பட்டது. இதில் 14 வயது பிரிவில் வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியும், 17 வயது பிரிவில் சில்லக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியும், 19 வயது பிரிவில் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியும் முதலிடம் பிடித்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் முதலிடத்தை பிடித்த அணிகள், வீரர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு விளையாட தகுதி பெற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%