அதிகம் பேசாதே
ஆணவங் கொள்ளாதே
இதயம் வலித்திடவே
இனியும் பேசாதே!
பதமாகப் பேசுவாயே
பாடம் படிப்பாயே
எதையும் அளவாக
இன்பாய்ப் பேசிவிடு!
பிழையைச் செய்யாதே
பெருமை பேசாதே
ஒழுக்கந் தவறாதே
ஒருங்காய் வாழ்வாயே!
பழக்கம் எப்படியோ
பாங்காய் நடந்திடுவாய்
வழக்கப் படிதானே
வாழ்க்கை நடத்திவிடு!
பேசல் குறைத்திடுவாய்
பிழையைத் தவிர்த்துவிடு
ஏசல் நிறுத்திவிடு
இனிமை வழிசெல்வாய்!
ஆசை குறைத்துவிடு
அன்பை நிறைத்துவிடு
தேசம் போற்றிடவே
தேர்ந்தே வாழ்ந்துவிடு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%