பேராவூரணி ரோட்டரி சங்க தலைவராக சிவ சதீஷ்குமார் பொறுப்பேற்பு
Jul 15 2025
69

பேராவூரணி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா, பேராவூரணி எம் எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் கோவிந்தராஜ் கலந்து கொண்டார். நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக பாண்டிச்சேரி காவல்துறை உயர் அதிகாரி சத்திய சுந்தரம் ஐ பி எஸ், திரைப்பட இயக்குனர் இரா.சரவணன், வாட்டர் வாரியர் நிமல் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர். துணை ஆளுநர் ராமதாஸ் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். 2025 2026 ஆண்டுக்கான புதிய தலைவராக சிவ.சதீஷ்குமார், செயலாளராக கேஎஸ்.நீலகண்டன், பொருளாளராக பி.சுரேஷ் மற்றும் குழுவினர் ஒரு பேச்சு கொண்டனர். விழாவில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், பட்டுக்கோட்டை முன்னாள் நகர் மன்ற தலைவர் ஜவகர் பாபு, வர்த்தக கழகத் தலைவர் அபிராமி சுப்பிரமணியன், பல்வேறு சங்கங்களின் பொறுப்பாளர்கள், வர்த்தகர்கள், பேராவூரணி பகுதியில் முக்கியஸ்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?