வான் மழை வரவினால்
பூமித்தாய் கருவறை தாங்க
புவனம் பார்க்க
விளைந்து நிற்கும் நெற்கதிர்கள்
இஞ்சி மஞ்சள் கதிர் பரப்பி
இனிய நற் காய்கனி
மணம் பரப்பி
இல்லத்தில் இனிமை பொங்க
வந்ததிந்தத் திருநாள்
கடமை மறவாக் கதிரவனும்
காலையில் செய்யும் பணிக்கு
காட்டும் நன்றித் திருநாள்
வாசல் நிறைத்த மாக்கோலம்
மண் மணம் மாறாத் தவக்கோலம்
சேறு தாங்கிய தானியமும்
சாறு தாங்கிய கரும்பும்
ஊர் போற்றும் உறவுகளும்
உண்மை அன்பைப் பறைசாற்றும்
சர்க்கரைப் பொங்கலின் சுவையாக
சமத்துவ வாழ்வு வரட்டும்
பொங்கும் தணலில்
பொல்லாதன எரியட்டும்
உழைக்கும் உழவன்
வாழ்வு சிறக்கட்டும்
இயற்கை தந்த இன்ப வாழ்வு
என்றும் தொடரட்டும்.

தமிழ்நிலா
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?