பொழுது போகலையா - மெதுவா ரசிச்சு படிச்சு சிரிங்க !!

பொழுது போகலையா - மெதுவா ரசிச்சு படிச்சு சிரிங்க !!


மகள் : ஹலோ அம்மா

அம்மா : என்னம்மா எப்படி இருக்க..?

புது கல்யாணம், தனி குடித்தனம்,., மாப்பிள்ளை எப்படி பாத்துக்குறாரு..?


மகள் : அதெல்லாம் நல்லா இருக்கேன்மா. இன்னைக்கு டிபன் செய்ய போனேன். ரொம்ப கஷ்டபடாத., வெறும் உப்புமா செய் ., போதும் என சொல்லிட்டாரு.


அம்மா : அடேங்கப்பா., நல்ல மாப்பிள்ளைதான்டி. சரி நல்லா டேஸ்டா உப்புமா செஞ்சு கொடு.


மகள் : அதான்மா., உப்புமா செய்ய கால் கிலோ உப்பு எடுத்து வச்சிருக்கேன்.

மாவு எந்த மாவு எனத்தான் தெரியலை. அதான் ஃபோன் போட்டேன். அரிசி மாவா இல்ல கோதுமை மாவாம்மா..??

எந்த மாவுல செய்றது...??


அம்மா : ( அட சண்டாளி !!?? )


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."


மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.


கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.


மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...


இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!


இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.

மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.....


உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!


கணவன்: ???????!!!!!😂😂


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


வக்கீல் பையன் ஒருவன் ரயில்ல போயிட்ருந்தானாம்...


அப்போ அழகான பொண்ணு ஒண்ணு அவனுக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து ஒக்காந்தாளாம்..


 நம்மாளுக்கு செம குஷியாயிடுச்சாம்...


அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால லைட்டா நம்மாளு அந்த பொண்ண நோட்டம் உட்டானாம்....


அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவன பாக்க...


இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்டியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தானாம்...


கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணு இவன் இருந்த சீட் பக்கம் வந்து ஒக்கார...


வக்கீலு செம குஷியாகிட்ருக்கும் போதே....


அந்த பொண்ணு இவன்ட்ட....


ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்ற வாட்ச், மோதரம், செயினு, பர்ஸ், கிரடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு....


 இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம்போட்டு எல்லாரையும் கூப்டுருவேனு சொல்லிச்சாம் அந்த சூப்பர் பிகர்....


பையன் தான் வக்கீல் ஆச்சே...


அதுக்கு நம்ம வக்கீல் பையன் ...


பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து,

எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது... 


நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில ...


நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு எழுதி காட்டினானாம்...


அந்த பொண்ணும் பேப்பர வாங்கி அவ என்ன சொன்னாலோ.... 


அதே மாதிரி அப்படியே எழுதி காட்டினாளாம்...


அத வாங்கி பாக்கெட்ல வச்ச பின்னாடி நம்மாளு மெதுவா சொன்னானாம்....


இப்போ கத்து பாக்கலாம்...!!!


ங்கொய்யால, யாருகிட்ட!  


நீதி:


"PROOF OF DOCUMENTATION IS VERY VERY IMPORTENT"

 

எதுக்குமே ரெக்கார்டு தான் ரொம்ப முக்கியம்.


🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫


Husband: " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..."


Wife: "உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு போச்சு, காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....."


Point: Wife is always right!


Husband: வெங்காய பஜ்ஜில வெங்காயத்தை தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கு," 😧


Wife: "இருக்றத சாப்பிடுங்க!!

இனி மைசூர்பாக் ல மைசூரை தேடுவீங்களாக்கும்....???"

Point: சொன்னேன்ல, wife is always right!!


Husband: "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!"


Wife: "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????"


Husband: "நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா" 😁

Point: Accept it, wife is always right!


-+++++++++++++++++


பழுதடைந்த ஒரு லாரியை,

மற்றொரு லாரி,கயிறைக் கட்டி இழுத்துச்செல்வதை பார்த்தார்.


என்ன சார் ரொம்ப நேரமா பார்த்துட்டே இருக்கீங்க என மற்றவர் கேட்டார்.


ஒரு கயிறை கொண்டு போறதுக்கு ரெண்டு லாரியா என கூறிவிட்டு, மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார


+++++++++++++++++++++


ரவி : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். 

வெறும் டீ மட்டும் தானா மச்சீ?


ராமு : பின்ன என்ன செய்யணும்?


ரவி : கடிக்க... ஏதாவது?


ராமு : நாய் இருக்கு... அவுத்துவிடவா?


-++++++++++++++++++++

,

😵 *குடிச்சு குடிச்சு கை நடுங்குது டாக்டர்*.


👨🏿‍⚕ *கவலை படாதீங்க உங்க குடிப்பழக்கத்தை நிறுத்திடலாம்.*


😱 *கை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க டாக்டர் சரக்கு சிந்துது*


++++++++++++++++++++++


அ‌திக குசு‌ம்பு ‌பிடி‌த்த ஒரு‌த்த‌‌ர், செ‌ன்‌ட்ர‌ல் ர‌யி‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் அருகிலிருந்தவரை கேட்டார்.


ஹெளராஹ் எக்‌ஸ்‌பிர‌ஸ் எத்தனை மணிக்கு புறப்படும்?

10.30 மணி.

பெங்களூர் மெயில்?

11.25.

தமிழ்நாடு எக்‌ஸ்‌பிர‌ஸ்?

1.15.

சதாப்தி எக்‌ஸ்‌பிர‌ஸ்?

பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு - 3.00 மணிக்கு.


பிருந்தாவன் எக்‌ஸ்‌பிர‌ஸ்?

பொறுமையிழந்த அவ‌ர், நீங்கள் எந்த ஊரு‌க்கு‌ப் போக வேண்டும்?


நா‌ன் எ‌ந்த ஊரு‌க்கு‌ப் போக‌வி‌ல்லை, தண்டவாளத்தைத் தாண்டணும் அதா‌ன் கே‌ட்டே‌ன்


++++++++++++++++++++++++++++


நீதிபதி : பேங்க்ல பணத்தைக் கொள்ளையடிச்ச சரி...போகும் போது பேங்க் மேனேஜர் வழுக்கை மண்டையில ரெண்டு கொட்டு கொட்டிட்டு போயிருக்கியே ஏன்?


திருடன் : பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது எசமான். 

++++++++++++++++++++++++++++


கரண்டி ரொம்ப_ வெயிட்டு

என்பது, கடையில வாங்கும்

போது தெரியாது!


வீட்ல

வாங்கும் போது தான்

தெரியுது என்னா அடி.

...

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%