அப்படியே தத்துவ மழை பொழிஞ்சிருக்கு ...கூலா நனையுங்க (திட்டாம )
...........
டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா அது சினிமா தியேட்டர்.. ஆனா உள்ள போயி டிக்கெட் வாங்கினா அது ஆபரேசன் தியேட்டர்.
...........
ட்ரெயினுக்கு டிக்கெட் வாங்கிட்டு பிளாட்பார்ம்ல உக்காரலாம். ஆனா பிளாட்பார்முக்கு டிக்கெட் வாங்கிட்டு ட்ரெயினில உக்கார முடியாது.
.........
ரயில்வே ஸ்டேஷனில போலீஸ் இருக்க முடியும்... ஆனா போலீஸ் ஸ்டேஷனில ரயில் இருக்க முடியாது..
..........
ஆம்பிளைங்க அடிபபட்டா ஆம்புலன்ஸ் வரும்.. ஆனா பொம்பிளைங்க அடிபபட்டா பொம்புலன்ஸ் வருமா?
...........
அண்ணன் பொண்டாடிய அண்ணின்னு கூப்பிடலாம்.. ஆனா தம்பி பொண்டாடிய தண்ணின்னு கூப்பிட முடியாது...
...............
தண்ணில மீன் இருக்கறதுனால தண்ணி நான்-வெஜ் ஆகாது...
.............
என்னதான் மீனுக்கு நீச்சல் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புல நீந்த முடியாது..
..........
கால்வாயில கால் வைக்க முடியும்.. ஆனா வாய்க்கால்ல வாய் வைக்க முடியுமா?
.............
பஸ்ஸுல நீ எறினாலும், பஸ்ஸு உன் மேல எறினாலும், டிக்கெட் வாங்கப் போறதேன்னவோ நீ தான்
.
...................லஞ்ச் பாக்கில் லஞ்ச் எடுத்துட்டு போகலாம்.. ஆனா ஸ்கூல் பாக்கில் ஸ்கூல எடுத்துட்டு போக முடியாது...
...........
டூல் பாக்ஸில டூல பாக்க முடியும்.. ஆனா மாட்ச் பாக்ஸில மாட்ச பாக்க முடியாது..
..............
பச்சை மிளகாயில பச்சை இருக்கும்.. ஆனா குடை மிளகாயில குடை இருக்குமா?
.............................
.சவுத் இந்தியால நார்த்தங்காய் கிடைக்கும்.. ஆனா நார்த் இந்தியால சவுத்தங்காய் கிடைக்குமா?
............
மெழுக வச்சி மெழுகுவர்த்தி செய்யலாம்.. ஆனா கொசுவ வச்சி கொசுவர்த்தி செய்ய முடியாது...
.............
கோவில் மணிய நாம அடிச்சா சத்தம் வரும்.. ஆனா கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம் தான் வரும்...
..........
குவார்ட்டர் போட்டுட்டு குப்புற படுத்துக்கலாம் ஆனா குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது..
...............
சோடாவ கூலிங்குல வெச்சா அது கூலிங் சோடா.. அதுக்காக வாஷர்ல வெச்சா அது வாஷிங் சோடா ஆகாது...
..........
தண்ணீர தண்ணின்னு சொல்லலாம்.. அதுக்காக பன்னீர பன்னீன்னு சொல்ல முடியாது...
.........
சிற்பி, கல்லை உளியால அடிச்சா அது கலை ஆனா நாம உளியால சிற்பிய அடிச்சா அது கொலை
.......
இன்னைக்கு தூங்கினா நாளைக்கு எந்திரிக்க முடியும்..ஆனா நாளைக்கு தூங்கினா.. இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?
................
பஸ்ஸுல ஏறினது கலெக்டரா இருந்தாலும்.. முதல் சீட்டு டிரைவருக்கு தான்
.............
க்ரீம் பிஸ்கட்டுல க்ரீம் இருக்கும்.. ஆனா நாய் பிஸ்கட்டுல நாய் இருக்காது...
..............
ஒரு எறும்பு ஆயிரம் யானையக் கூட கடிக்கலாம்.. ஆனா ஆயிரம் யானை நெனசாலும் ஒரு எறும்பக் கூட கடிக்க முடியாது...
...............
பானுக்கும் (fan காத்தாடிப்பா ) ரெக்கை இருக்கு.. பறவைக்கும் ரெக்கை இருக்கு...பானால பறக்க முடியாது.. பறவையால சுத்த முடியாது..பான் சுவிட்ச அமுக்கினா சுத்தும்.. பறவைய அமுக்கினா கத்
தும்... இதாம்பா உலகம்...
........................
..நடந்தா கால் வலிக்கும்.. ஆனா கால் வலிச்சா நடக்க முடியாது....