போற்றுபவர் போற்றட்டும்

போற்றுபவர் போற்றட்டும்


அறுசீர் மண்டிலம்.


நேர்வழி சென்றால்

நிம்மதி

நினைத்தே வாழ்வோம்

சந்நதி

யார்வழி வேண்டா

நீமதி

ஏனென்று கேட்க

சம்மதி!

ஊர்வழி போனால்

நல்வழி

உணர்ந்தே போனால்

சொல்வழி

ஏர்வழி தானே

உழுமதி

எங்குமே நேர்மை

பெறுமதி!


போற்றக் காண்போம்

புகழ்மதி

பொலிவைக் காண்போம்

எழில்மதி

தூற்றிச் சென்றால்

தீமதி

தெளிவாய்ச் சென்றால்

நாவழி!

ஏற்ற கருயே

உன்மதி

எழிலாய்க் காண்போம்

கண்மதி

சாற்று கவிகள்

கவிமதி

சாந்தாய் மணக்கும்

கவிமதி!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%