போலீஸ் மீதான பொதுமக்கள் –இளைஞர்களின் பார்வையை மாற்ற வேண்டும்: டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

போலீஸ் மீதான பொதுமக்கள் –இளைஞர்களின் பார்வையை மாற்ற வேண்டும்: டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு



போலீஸ் மீதான பொதுமக்கள் இளைஞர்களின் பார்வையை மாற்ற வேண்டியது உடனடி தேவை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள், மத்திய ஆயுதப்படைகள், மத்திய போலீஸ் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற 60-வது மாநாடு சத்தீஷ்காரின் தலைநகர் ராய்ப்பூரில் நடந்தது.


‘வளர்ந்த பாரதம்: பாதுகாப்பு பரிமாணங்கள்’ என்ற தலைப்பில் நடந்த இந்த 3 நாள் மாநாட்டின் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-


தொழில்முறை, உணர்திறன் மற்றும் எதிர்வினையாற்றும் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் போலீஸ் மீதான பொதுமக்களின் குறிப்பாக இளைஞர்களின் பார்வையை மாற்ற வேண்டியது உடனடி தேவையாக இருக்கிறது.


தடை செய்யப்பட்ட அமைப்புகளை தொடர்ந்து கண்காணிப்பதற்கான நெறிமுறைகள், இடதுசாரி பயங்கரவாதத்தில் இருந்து விடுபட்ட பகுதிகளுக்கு வளர்ச்சிக்கான வழிமுறைகள், கடலோர பாதுகாப்பை மேம்படுத்த புத்தாக்க மாதிரிகள் ஆகியவற்றுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மக்கள் வசிக்காத தீவுகளை ஒருங்கிணைப்பதற்கான புதுமை யான யுக்திகளைப் பின்பற்றுதல், தேசிய கட்டகத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட தரவுத்தளங்களை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் இந்த அமைப்புகளை செயற்கை நுண்ணறிவு மூலம் இணைத்து செயல்படக்கூடிய நுண்ணறிவை உருவாக்குதலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


முன்னதாக போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் பதக்கங்கள் வழங்கினார். மேலும் நகர்ப்புற காவல் பணியில் சிறப்பாகச் செயல்படும் மூன்று நகரங்களுக்கான விருதுகளையும் அவர் வழங்கினார்.


இந்த மாநாட்டில் உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%