
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
துபாய்,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன. இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவி புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா (3 வெற்றி, 1 முடிவில்லை) முதல் இடத்தில் உள்ளது. அதேவேளையில் வங்காளதேச அணி (1 வெற்றி, 3 தோல்வி) 6வது இடத்தில் உள்ளது.
நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று வெற்றிப்பயணத்தை தொடர ஆஸ்திரேலியா முயற்சிக்கும். அதே சமயம் தோல்விப்பாதையில் இருந்து மீண்டு வர வங்காளதேசம் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?