புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ்
Oct 16 2025
10

புதுடெல்லி,
புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
அதன்படி, இரவு 7.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர்.
இதன் காரணமாக ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 45 புள்ளிகள் எடுத்தன. இதன் காரணமாக ஆட்டம் டை ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 7-5 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?