மாநில அரசின் வரம்பிற்குள் தலையிடுவதா? அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
Oct 16 2025
16

புதுதில்லி, அக். 14 - டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தப் பட்ட விவகாரத்தில், அமலாக்கத்துறை விசா ரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு, உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், வினோத் சந்திரன் அமர்வில், செவ்வாயன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கள் கபில் சிபல், முகுல் ரோத்கி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். “டாஸ்மாக் வழக்கை மாநில அரசு விசா ரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை தலையிடும் அதிகாரமில்லை” என்று அவர்கள் கூறினர். “கூட்டாட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுகிறது” என்றும் குற்றம் சாட்டினர். “அமலாக்கத்துறை விசாரணையின்போது, பெண்கள் உட்பட டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள் 40 மணி நேரம் சிறைப்பிடித்து வைக்கப்பட்டனர். அமலாக்கத்துறையின் இந்த செயல் சட்ட மீறலாகும். மேலும் அவர்களுடைய அலை பேசிகளை கைப்பற்றி தரவுகளை பதிவிறக்கம் செய்தது உரிமை மீறல்?” என்றும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “டாஸ்மாக் வழக்கை தமிழ்நாடு அரசு விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத் துறை ஏன் தலையிட்டது?, இது மாநில அரசின் கூட்டாட்சி உரிமைக்கு எதிரானது இல்லையா?, சட்டம் - ஒழுங்கு யார் கட்டுப் பாட்டில் உள்ளது?, அமலாக்கத்துறை மாநில வரம்பிற்குள் ஏன் தலையிடுகிறது?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது டன், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை யை நீட்டித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?