மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


ரியாத்,


மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதிஅரேபியாவின் ரியாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் சபலென்கா (பெலாரஸ்) - அனிசிமோவா (அமெரிக்கா) மோதினர்.


சம பலம் வாய்ந்த இரு வீராங்கனைகள் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றியதால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த செட்டை சபலென்கா கைப்பற்றினார்.


சபலென்கா இந்த ஆட்டத்தில் 6-3, 3-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.


நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சபலென்கா - ரைபகினா பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%