மதுரையில் கர்னல் பென்னிகுயிக் நினைவாக இளையர் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி

மேலூர் அக்.5–
மதுரை மாவட்ட இளையர் சைக்கிளிங் அசோசியேசன் சார்பில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்னல் பென்னிகுயிக் நினைவாக நடத்திய மதுரை மாவட்ட சைக்கிளிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி வெள்ளலூர் விலக்கு சிவகங்கை ரோட்டில் நடைபெற்றது.
இதில் 11வயது, 14வயது, 16வயது, 18 வயது, 23 வயது உட்பட்டோருக்கான சைக்கிளிங் பந்தயம் வெகு சிறப்பாக நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும், வெற்றிச் சான்றிதழும் விழா குழுவினரால் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் தலைவர் எம்.சுதாகர், பொதுச்செயலாளர் எம்.விக்னேஷ் குமார், பொருளாளர் டி.பழனி, தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் லைன் ஜி.கண்ணன், மதுரை மாவட்ட இளைஞர் சைக்கிளிங் அசோசியேசன் தலைவர் பா.தெய்வேந்திரன், மதுரை மாவட்ட இளைஞர் சைக்கிளிங் அசோசியேசன் செயலாளர் ஆர். கெங்காதரன், மதுரை மாவட்ட இளைஞர் சைக்கிளிங் அசோசியேசன் பொருளாளர் எஸ்.செல்வம், மதுரை மாவட்ட இளைஞர் சைக்கிளிங் அசோசியேசன் துணைச் செயலாளர் ஜி.பிரபாகரன் ஆகியோர் சைக்கிளிங் பந்தயத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?