காசா போர் நிறுத்த முன்மொழிவு நிபந்தனைகள் : சில அம்சங்களை ஏற்பதாக ஹமாஸ் அறிவிப்பு

காசா போர் நிறுத்த முன்மொழிவு நிபந்தனைகள் : சில அம்சங்களை ஏற்பதாக ஹமாஸ் அறிவிப்பு



காசா,செப்.5- இஸ்ரேல் - காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டிரம்ப் முன்வைத்த முன்மொழிவுக ளில் சில பகுதிகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் முன்மொழிவில் உள்ள சில அம்சங்களுக்கு பேச்சுவார்த்தைகள் தேவை எனவும் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து காசா மீதான தாக்கு தலை நிறுத்த இஸ்ரேலுக்கு டிரம்ப் ‘உத்தர விட்டுள்ளார்’. எனினும் இஸ்ரேல் தனது தாக்கு தலை மேலும் மூர்க்கத்தனமாக மாற்றியுள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் டிரம்ப் இஸ்ரேல் காசா போரை நிறுத்த 20 அம்ச முன்மொழிவு களை வெளியிட்டார். இதில் பெரும் குழப்பமும், உறுதியற்றதாகவும் இருந்தது. பாலஸ்தீனர்களின் மறுவாழ்வு திட்டம், காசாவை மறு கட்டமைப்பு செய்வது, மருத்துவம் உள்ளிட்ட மனிதாபிமான அடிப்படையிலான நிவாரண உதவிகள் பற்றி உறுதியான தெளிவான திட்டங்கள் அதில் இல்லை. குறிப்பாக பாலஸ்தீனர்களின் நியாய மான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அந்த முன்மொழிவு இல்லை. அதேபோல பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்காமல் ஒரு நிர்வாகக் குழுவை அமைத்து சர்வதேச கட்டுப்பாட்டில் நிர்வகிப்பது என கூறப்பட்டது. சர்வதேச படை அங்கு நிறுத்தப்படும் வரை இஸ்ரேல் ராணுவம் இருக்கும் எனவும். சர்வதேச படை நிலை நிறுத்தப்பட்ட பிறகு காசாவிற்குள் ஒரு எல்லையோரப் பாதுகாப்புப் பகுதியை இஸ்ரேல் வைத்துக் கொள்ளக்கூடும். அதாவது காசாவை சுற்றி இஸ்ரேல் ராணுவம் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் என மறைமுகமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஹமாஸ் அமைப்பு இந்த முன்மொழிவு மீது உடனடியாக கருத்து தெரி விக்காமல் நேரம் எடுத்துகொண்டு தற்போது அதன்மீதான தனது நிலைபாட்டை தெரிவித் துள்ளது. குறிப்பாக உயிருடன் மற்றும் சடலமாக உள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கத் தயார். மத்தியஸ்தர்கள் மூலம் உடனடியாகப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்குத் தயார். சர்வதேச அமைப்பின் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் ‘போர்டு ஆஃப் பீஸ்’ என்ற சர்வதேச இடைக்கால நிர்வாக அமைப்பானது, காசாவை ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தில் இருந்தும் தனிமைப்படுத்தும்; எனவே, அம் முன்மொழிவை ஹமாஸ் அமைப்பு ஏற்க வில்லை.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%