மதுரை இலக்கியப் பேரவை சார்பில் இராமனூத்து அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவொளிச் சுடர் விருது வழங்கி சிறப்பிப்பு
Sep 22 2025
27

சண்சரண் சமூகம் கல்வி நல அறக்கட்டளை மற்றும் மதுரை இலக்கியப் பேரவை சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா பாரதியார் ஆசிரியராகப் பணிபுரிந்த மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.தமிழகம் முழுவதும் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் கல்விப்பணியைப் பாராட்டி ஆசிரியர் தின விழாவினை முன்னிட்டு அறிவொளிச் சுடர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இவ்விருதினை இந்தாண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.விருதினை மதுரை இலக்கியப் பேரவையின் தலைவரும் நிறுவுநர்மாகிய முனைவர் சண்முகதிருக்குமரன் வழங்கினார்.சண் சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வைஜெயந்திமாலா நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் குருசாமி உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சாமிதுரை மற்றும் பேராசிரியர் பாஸ்கரராஜன் ஆகியோர் கலந்து கொண்டர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?