மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.8½ கோடியில் வைகை குடிநீர்: டெண்டர் வெளியீடு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.8½ கோடியில் வைகை குடிநீர்: டெண்டர் வெளியீடு


 

மதுரை,


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையானது திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2021 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்ட கட்டிடங்களுக்கான பணிகளை இந்த மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 2 லட்சத்து 31 ஆயிரத்து 782 சதுர மீட்டர் பரப்பளவில் 2-ம் கட்ட கட்டிட பணிகள் தொடங்க உள்ளன.


இந்த நிலையில் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மூலம் ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் வைகை படுகையில் இருந்து கரடிக்கல் பகுதி வழியாக ராட்சத குழாய்கள் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வைகை குடிநீர் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.


ரூ.8.40 கோடியில் இந்த குடிநீர் திட்ட பணிக்காக டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 9 மாதத்தில் இந்த பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டம் மூலம் எய்ம்ஸ் வளாகத்திற்கு தினசரி 2.61 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%