மனிதன் மாற வேண்டும்.

மனிதன் மாற வேண்டும்.


இருளில் ஒதுங்கும் உலகமடா.. அதை

மாற்றிடல் நமது கடமையடா..!

ஔியெனும் தீபம்

ஏற்றிடடா.. அதனால்

உலகம் ஔிமயம் ஆகுமடா..!


தூங்கும் கனவில் மிதக்கின்றான்.. இவன்

ஏங்கும் நிலையில் இருக்கின்றான்..!

ஓங்கும் ஔியை ஏன் மறக்கின்றான்?இதை

உணர்ந்தால் வாழ்வில் சிறக்கின்றான்!


பதுங்கிக் கிடந்தே பழகிவிட்டான்.. இவன்

பாயில் படுத்தே கனவுகண்டான்!

செயலைச் செய்ய துணியாமல்.. இங்கு சிலையாய் மனிதன் மாறிவிட்டான்!


காலம் யாருக்கும் நின்றிடுமோ.. இங்கு

கவலை தானாய் 

ஓடிடுமோ.?தினம்..

சோம்பிக் கிடப்பதை 

நீக்கிவிட்டால்.. இவன்

செயலால் வாழ்வை அடைந்திடுவான்!


வே.கல்யாண்குமார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%